கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நடவடிக்கைகளை உடனடியாக துறைமுகங்கள் அதிகார சபை ஊடாக ஆரம்பிக்குமாறு கோரி துறைமுக தொழிற்சங்கங்கள் இன்று சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தன.

கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்தைக் கண்டித்து துறைமுகங்கள் அதிகார சபைக்கு முன்பாகக் கூடிய துறைமுக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் துறைமுக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்கள் துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலில் இருந்து எல்.பி. நுழைவாயில் வரை பேரணியாகச் சென்றனர்.

இதன்போது, துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை ஊடாக செயற்படுத்துவது தொடர்பிலான உறுதியான ஆவணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றைக் கையளித்ததாக அகில இலங்கை துறைமுகங்கள் பொது ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் சந்திரசிறி மஹகமகே குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு முன்னதாக எமக்கு எழுத்து மூல உறுதிமொழியை வழங்குங்கள். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிறவனமயப்படுத்தவோ அல்லது வேறு பெயரில் தனியார்மயப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என எழுத்து மூல உறுதியை எமக்கு வழங்குங்கள். அந்த உறுதிமொழி கிடைக்கும் வரை நாம் போராட்டத்தைக் கைவிட மாட்டோம்

என சந்திரசிறி மஹகமகே குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.