ஆப்கானிஸ்தான் அணி உலக கிண்ணத்தை வென்ற பின்னர்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இளம் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷித் கான் உள்ளார். தனது மாயாஜால பந்து வீச்சால் முன்னணி துடுப்பாட்ட வீரர்களை திணறடித்து வருகிறார். தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் தலைவனாக இருக்கும் இவர், ஆப்கானிஸ்தான் அணி உலக கிண்ணத்தை வென்ற பிறகுதான் திருமணம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

அஜாதி ரேடியோவுக்கு பேட்டியளிக்கும்போது ''ஆப்கானிஸ்தான் அணி உலக கிண்ணத்தை வென்ற பின்னர்தான் நிச்சயதார்த்தம் மற்றும் திருணம் செய்து கொள்வேன்'' என்று தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.