(எம்.ஆர்.எம்.வஸீம்)

பதாகைகளில் இருக்கும் எனது பெயர் மற்றும் உருவத்தை மறைக்கலாம். ஆனால் பொலன்னறுவை மக்களின் உள்ளத்தில் பதிந்திருக்கும் எனது பெயரை யாராலும் மறைக்க முடியாது.

அத்துடன் எமது அணியில் இருக்கும் சிலர் எனக்கு எதிராக மேற்கொண்டுவரும் விமர்சனங்களை கண்டு நான் ஒருபோதும் சளைக்கமாட்டேன் என முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுன பொலன்னறுவை மாவட்ட வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பொலன்னறுவை மாவட்டத்தில் பெயர் பலகைகளில் இருக்கும் எனது பெயர்களை யாருக்கு வேண்டுமானாலும் மறைக்கலாம். ஆனால் பொலன்னறுவை மக்களின் உள்ளங்களில் இருந்து எனது பெயரை யாராலும் மறைக்க முடியாது என்பதை அவர்களுக்கு கூறிக் கொள்கின்றேன்.

ஏனெனில் 52 வருட அரசியல் வாழ்க்கையில் பொலன்னறுவை மாவட்டத்துக்கு பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றேன்.

எனவே அடுத்து வரும் ஆட்சியில் பொலன்னறுவை மாவட்டத்துக்கு 10 வருட வேலைத்திட்டத்தை மேற்கொள்வேன். ஆகஸ்ட் 5ஆம் திகதிக்கு பின்னர் உருவாகப்போவது நாட்டை ஆட்சி செய்த மூன்று ஜனாதிபதிகளின் ஆதரவுடனான நிலையான அரசாங்கமாகும். அதனால் மக்கள் தகுதியானவர்களை மாத்திரம் தெரிவுசெய்து பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.