மே.தீவுகள் அணிக்கெதிரான Manchester 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் டொமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினர்.

இங்கிலாந்து - மே.தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி Manchester இல் நேற்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றிப் பெற்ற மே.தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் களத்தடுப்பினை தேர்வு செய்தார்.

அதன்படி இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 82 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டொமினிக் சிப்லி 86 ஓட்டங்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 59 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் டொமினிக் சிப்லி சதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் சதம் விளாசினார். இங்கிலாந்து அணி 341 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டொமினிக் சிப்லி 120 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 260 ஓட்டங்கள் குவித்தது.

இந்த தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 09 விக்கெட்டுகளை இழந்து 469 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது. தற்போது மே.தீவுகள் அணி தமது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.