பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பமாகின்றது.
அதன்படி, சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்டோர் இன்றைய தினம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை நாளை (14) மற்றும் நாளை மறுதினங்களில் (15) அரச பணியாளர்களுக்கும், 16ஆம் 17ஆம் திகதிகளில் பொலிஸார் மற்றும் முப்படையினரும் தபால் மூலம் வாக்களிக்க முடியும். இவ் திகதிகளில் வாக்களிக்க தவறும் வாக்காளர்கள் 20ஆம், 21ஆம் திகதிகளிலும் தபால் மூலம் வாக்களிப்புக்க முடியும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.