ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளரை கண்டுபிடிக்க உதவிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு பொலிஸ்மா அதிபரினால் சிறப்பு பரிசுத் தொகையொன்று வழங்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு ஆதரவளித்த அனைத்து ஊழியர்களுக்கு இது வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இன்று (24) அதிகாலை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற தொற்றாளர் முற்பகல் 10 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டார்.

குறித்த தொற்றாளரை கண்டுபிடிக்க உதவிய இராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்து ஊடக நிறுவனங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொலிஸார் தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.