கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கம்பஹா பொது வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சை பிரிவுகள் சில ஸ்தாபித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அவசர சிகிச்சைப் பிரிவுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள் மேம்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர், டாக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கந்தக்காட்டில் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண்பதற்காக இதுவரை 6000 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,708 ஆக அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.