வாக்காளர் அட்டைகள்  பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் கையொப்பமிடுவதற்காக பிரத்தியேக  பேனைகளை பயன்படுத்துமாறு தபால் திணைக்களம்  பொதுமக்களிடம் வேண்டு கோள்விடுத்துள்ளது.

இதேவேளை சுய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளவர்களின் வீடுகளுக்கு  உத்தியோகப்பூர்வ வாக்களாளர் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடு  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுகாதார ஆலோசனைகளுக்கமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக  பிரதித் தபால்மா அதிபர்  ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்  சுகாதார தரப்பினரின்  ஆலோசனைகளுக்கமைய   குறித்த பகுதிகளில் உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 19 மற்றும் 26 ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.