ஆரம்ப காலக்கட்டத்தை ஒப்பிட்டால் இந்திய அணி தலைவர் விராட் கோலியை விட பாபர் அசாம்தான் சிறந்தவர் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தலைவர் விராட் கோலி தலைசிறந்த வீரராக உள்ளார். அதேபோல் பாகிஸ்தான் ஒருநாள் அணி தலைவர் பாபர் அசாமும் தலைசிறந்த வீரராக உள்ளார். இருவரையும் அடிக்கடி ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.

ஆனால் பாபர் அசாம் பலமுறை என்னை விராட் கோலியுடன் ஒப்பிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொடக்க காலத்தில் ஒப்பிட்டால் விராட் கோலியை விட பாபர் அசாம் சிறந்த வீரர் என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ''இந்த குறைந்த காலக்கட்டத்தில் ஏராளமான சாதனைகளை பாபர் அசாம் படைத்துள்ளார். தற்போது இதுவரை செய்த சாதனைகளை விட சிறப்பாக அவரால் செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும்.

விராட் கோலி 10 வருடம் விளையாடியுள்ள நிலையில், பாபர் அசாம் மூன்று, நான்கு வருடங்கள்தான் விளையாடியுள்ளார். ஆனால், ஆரம்ப காலக்கட்டத்தில் இருவரையும் ஒப்பிட்டு பார்த்தால் பாபர்தான் முன்னிலையில் இருப்பதை உங்களால் பார்க்க முடியும்''என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.