உனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

உனவட்டுன ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் பழகயிருந்ததை அடுத்து அவர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால் ரயில் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ கூறியுள்ளார்.

குறித்த ஊழியரின் PCR பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை, உனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.