நம்மை கவனித்தாலே நாமும் கவனிப்போம் கஹட்டோவிட்ட பொதுஜன பெறமுன தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சிரேஷ்ட பாராளுமன்ற வேட்பாளரும் அமைச்சருமான பிரசண்ண ரணதுங்கா தெரிவிப்பு.

பொதுஜன பெறமுன கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் (20) கஹட்டோவிட்ட இமாம் ஷாபி நிலையத்தில் நடைபெற்றது.

பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டமும் கஹட்டோவிட்ட வாழ் மக்களுடனான சந்திப்பு நிகழ்வும் நேற்றைய தினம் இரவு இமாம் ஷாபி நிலையத்தில் நடைபெற்றது .இந்த நிகழ்வில் இக்கட்சியில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களான முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபையின் தலைவர் மற்றும் தற்போதைய பிரதேச தலைவர் பிரியந்த புஷ்பகுமார அவர்கள் கலந்து  கொண்டதுடன் விசேட பேச்சாளராக சிரேஷ்ட வேட்பாளராகவும் கம்பஹா மாவட்டத்தில் இருந்து போட்டியிடும் பிரசன்ன ரணதுங்க அவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு அதிகமாக வாக்களிக்கவில்லை அவர்கள் முஸ்லிம் மதவாத கட்சிகளுக்கும் அவர்களின் தலைமைகள் சொல்லும் கட்சிக்குமே வாக்களித்தார்கள்.இறுதியில் ஸஹ்ரானின் பயங்கரவாத தாக்குதலின் பிண்ணணியில் இவர்கள் இருந்துள்ளார்கள் என்பதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இத்தகைய பயங்கரவாத குற்றச்சாட்டை கொண்டவர்களினதும் சமயத்தை முன்னால் போட்டு கொண்டு செல்லும் கட்சிகளுக்கே முஸ்லிம்கள் கடந்த காலங்களில் வாக்குகளை அளித்தார்கள்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெறமுன கட்சிக்கு முஸ்லிம்கள் பெருமளவில் வாக்குகளை அளிக்க தவறினார்கள் மினுவாங்கொடை கல்லொழுவ பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் ஊரில் இருந்து தமது கட்சிக்கு ஐம்பது வாக்குகளை மாத்திரமே வழங்கி இருந்ததாகவும் அதனால் இன்று வரை அங்கே குப்பைகளை அகற்றவேண்டாம் என தாம் கூறியிருப்பதாகவும் மக்கள் எங்களுக்கு ஆதரவு தந்தாலே அவர்களின் ஊர்பற்றிய அபிவிருத்தி பணிகளையும் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி கொடுக்க முடியும்.

நாங்கள் அபிவிருத்தி செய்யவும் அவர்களின் வாக்குகளை வேறு ஒருவருக்கு கொடுப்பதாக இருந்தால் அத்தகையவர்களையோ அந்த பகுதியையோ அபிவிருத்தி செய்வது பற்றி கவனம் செலுத்த முடியாது என்றும் நம்மை கவனித்தால் நமது கட்சிக்கு வாக்களித்தால் அவர்களுக்கு அல்லது அந்த ஊருக்கான அபிவிருத்தி திட்டங்களை செய்வது தொடர்பிலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்த முடியும் எனவும் இதற்காக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தொனிப்பொருளில் இயங்கிச்செல்கின்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் கரங்களை பலப்படுத்த முஸ்லிம்களும் ஒனறிணைய வேண்டும் அப்படி இருந்தாலே அவர்களின் தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும் என்றும் முன்னாள் முதலமைச்சரும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ பிரசண்ண ரணதுங்கா அவர்கள் கஹட்டோவிட்டவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - Kahatowita News Page Official




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.