வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் மிளகு உற்பத்தியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய விலை குறைந்துள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்றுமதி குறைந்துள்ளமை மற்றும் இப்ராஹிம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அவரது வர்த்தகம் முடங்கியுள்ளது இதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

மொனராகலையில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்றுமதியை மீண்டும் ஆரம்பித்ததும் மிளகு விலை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

படல்கும்புர மிளகிற்கு சிறந்த விலை கிடைத்தது. கொரோனா தொற்று நோயால் விலை குறைந்துள்ளது. மறுபுறம் இப்ராஹிம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் அவரது வர்த்தகம் முடங்கியுள்ளதால், விலை மேலும் குறைந்துள்ளது. நாங்கள் இந்த பிரச்சினையை தீர்ப்போம். கொரோனா தொற்று நோய் முடிவுக்கு வந்த பின்னர், மீண்டும் ஏற்றுமதிகளை ஆரம்பித்ததும் மீண்டும் விலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மொஹமட் இப்ராஹிம் என்பவர் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பு ஷெங்ரீலா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இம்சாத் அஹமட் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் அமஹட் இப்ராஹிம் ஆகியோரின் தந்தை என்பதுடன் அவர் தற்போது விளக்கமறியலில் இருந்து வருகிறார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.