சஹ்ரான் ஹசீமின் தீவிரவாத கும்பலின் பிரபல உறுப்பினரான ஆமி மொஹிதீன் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிக்கு இடையில் தொடர்பு இருந்ததாக சந்தேகிப்பதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இனங்கண்டுள்ளது.

ஆமி மொஹிதீன் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல்கள் வழங்கிய போதிலும் அவர் கைது செய்யப்படாமை சிக்கலுக்குரிய நிலமை என ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கிய கிழக்கு மாகாண புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சஹ்ரான் ஹசீமின் தீவிரவாத கும்பலின் பிரபல உறுப்பினரான ஆமி மொஹிதீன் எனும் நபர் காத்தான்குடியில் உள்ள தன்னுடைய வீட்டை விட்டு பாசிக்குடா பகுதியில் இருந்த பாழடைந்த காணி ஒன்றில் மறைந்து இருந்ததாக அரச புலனாய்வு அதிகாரிகளினால் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வு அதிகாரிகளுக்கு கைது செய்யவதற்கான அதிகாரம் இல்லாத காரணத்தினால் ஆமி மொஹிதீன் மறைந்திருந்த இடம்தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குற்றப்புலனாய்வு திணைக்கள உப பொலிஸ் பரிசோதகர் டயஸ் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் நந்தலால் உள்ளிட்ட குழு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 07 ஆம் திகதி பாசிக்குடா பகுதிக்கு வந்திருந்த போதிலும் ஆமி மொஹிதீன் அந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் கூட சஹ்ரான் ஹசீமை கைது செய்ய புலனாய்வு பிரிவு தகவல்களைத் தேடிக்கொண்டிருந்த போதிலும் ஆமி மொஹிதீனை கைது செய்து சஹ்ரான் ஹசீம் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்த்தாலும் அவர் அந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் சஹ்ரான் ஹசீமை கைது செய்ய முடியாமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், தாக்குதலின் பின்னர் சந்தேக நபர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரச புலனாய்வு பிரிவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து கல்குடா பொலிஸாருடன் இணைந்து ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி ஓட்டமாவடி பகுதியில் வைத்து ஆம் மொஹிதீன் கைது செய்யப்பட்டதாக அவரல் சாட்சி வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும் கடந்த வருடம் ஏப்ரல் 24 ஆம் திகதி ஆமி மொஹிதீன் கைது செய்யப்பட்டு அவருடன் தொலைபேசியை சோதனை செய்த சந்தர்ப்பத்தில் இதற்கு முன்னர் சந்தேக நபரை கைது செய்ய வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்கள குழுவின் பொலிஸ் சார்ஜன்ட் நந்தலாலின் புகைப்படம் ஒன்று குறித்த தொலைபேசியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆமி மொஹிதீன் இதற்கு முன்னர் பயன்படுத்திய தொலைபேசி தகவல்கள் அழிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஆமி மொஹிதீன் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை அழைத்து செல்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்கள உப பொலிஸ் பரிசோதகர் டயஸ் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் நந்தலால் ஆகிய அதிகாரிகளே வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது சந்தேக நபரான ஆமி மொஹிதீன் ´சேர் இனக்கும் இந்த தாக்குதலுக்கு எந்த தொடர்பும் இல்லை, பொய் என்றால் நந்தலால் சேரிடம் கேட்டுப்பருங்கள்´ என தெரிவித்தாகவும் அவர் சாட்சி வழங்கியுள்ளார்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.