கொழும்பு ஐ.டீ.எச் இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  அங்கிருந்து தப்பிச்சென்ற கொவிட் 19 தொற்றாளரை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாக, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அங்கொடை தொற்று நோயியல் வைத்தியசாலையில் இருந்து, கடந்த 24 ஆம் திகதி தப்பிச் சென்ற மேற்படி நபர், 8 மணிநேரத்தின் பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் வைத்து, சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினரிடம் சிக்கினார்.
திருகோணமலையைச் சேர்ந்த இவர், போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாகி இருந்தவரெனத் தெரிவிக்கப்படுகிறது.
(Tamilmirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.