தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் கஹட்டோவிட்டாவில் நேற்று இரவு நடைபெற்றது இதிலே விசேட பேச்சாளராக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கலந்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் பற்றியும் வாக்களிக்கும் போது தமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் தெளவுபடுத்தினார்கள்.

கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற ஷான் மொஹம்மத் அவர்கள் கூட்டத்தில் ஆரம்ப உரை நிகழ்த்தியதுடன் உரிமைகளுக்காக போராடும் தேசிய மக்கள் சக்தியின் குரலை உயர்த்துவதற்காகவும் அதனூடாக உரிமைப்போராட்டத்தை நடாத்தி இனத்துவேச ஆட்சி முறையை இல்லாமல் செய்வதற்காகவும் சிங்கள முஸ்லிம் மலே பேர்கர் தமிழ் அனைத்து சமூகத்தவர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ள கட்சி என்பதாலும்,

 சுகபோகங்களுக்கும் சலுகைகளுக்கும் இலஞ்ச ஊழல் போதைப்பொருள் வியாபாரம் கப்பம் பெறுதல் போன்ற கீழ்த்தரமான மோசமான எவ்வித நடவடிக்கைகளையும் இக்கட்சியிலுள்ள அரசியல் வாதிகள் செய்ததில்லை என்பதாலும் முஸ்லிம்களை கடந்த காலங்களில் தாக்கிய போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஏனைய கட்சி அரசியல் வாதிகளை போல் வாய்மூடி இருக்காமல் அதற்கெதிராக பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் கொடுக்கும் சக்திகள் இந்த அணியிலேயே காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்  சலுகைகளுக்காகவும் அற்ப சொற்ப சன்மானங்களுக்காகவும் உங்கள் வாக்குகளை உங்களை ஏமாற்றிச்செல்பவர்களுக்கு வாக்களித்து விட்டு பின்னர் கைசேதப்படாமல் இருக்கவும் பாராளுமன்றத்தில் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் விஜித ஹேரத் போன்றவர்களையும் அவரது கட்சியையும் பலப்படுத்துவதன் மூலமே அரசும் ஏனைய கட்சிகளும் முஸ்லிம்கள் மீதோ ஏனைய சமயங்கள் மீதோ இனத்துவேசத்தைக்கொண்டு அடாவடித்தனங்களும் அட்டகாசங்களும் தொல்லைகள் கொடுப்பதையும் எதிர்த்து அதற்காக போராட முடியும் என்றும்  தனதுரையில் குறிப்பிட்டார்.

வழமை போல மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் நடைபெறும் போது பாரிய ஆதரவாரமும் பட்டாசுகளை கொழுத்தியும் விருந்து படைத்தும் வழியனுப்பி வைக்கின்ற போதிலும் வாக்குச்சாவடிக்கு சென்றால் வேறு ஒரு கட்சிக்கு வாக்களிக்கும் நிலைமையே காணப்பட்டது.இதனால் கொடுத்த விருந்தோம்பலை விடவும் போட்ட பட்டாசுகளை விடவும் குறைவான வாக்குகளே அளிக்கப்பட்டமை ஏமாற்றமளித்தது.

ஆகவே இம்முறை ஏனைய ஆரவாரங்களோ வரவேற்புகளோ எதுவும் இல்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பாராளுமன்றத்தில் சட்டமியற்றும் அறிவு ஆற்றல் அனுபவம் இருக்கும் தகுதி வாய்ந்தவர்களை முன்னிறக்கி இருக்கும் தேசிய மக்கள் கட்சியில் இருந்து அதிகமான உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தவர்களின் வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்தி அதிக பிரதிநிதிகளை அனுப்புமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று ஆரம்ப உரையை நிகழ்த்திய தேசிய மக்கள் கட்சியின் கம்பஹா மாவட்ட முஸ்லிம் வேட்பாளர் சகோதரர் ஷான் மொஹம்மத் வேண்டுகோள் விடுத்தார்.

பஸ்யாலையை பிறப்பிடமாக கொண்ட இவர் கொழும்பில் இக்கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பணியாற்றியிருப்பதோடு தேசிய மக்கள் கட்சி சார்பில் மொஹம்மத் ஷான் அதிகமாக விருப்பு வாக்குகளை பெறும் பட்சத்தில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக ஷான் மொஹம்மத் தெரிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ விஜித ஹேரத் கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து தேசிய மக்கள் கட்சியின்சார்பில் போட்டியிடுகின்ற வைத்தியர் லங்காமெனவிய சகோதரி அவர்களும் ,தேசிய பட்டியல் உறுப்பினர் மௌலவி முனீர் முழப்பர் அவர்களும், மாகாண சபை பிரதேச சபையின் உறுப்பினர்களும் பெருந்திரளான பொதுமக்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thanks - Kahatowita News Page Official

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.