ஜூலை மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸ் பரவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக பாடசாலைகளை திறக்கும் தினம் மற்றும் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 3.30 மணிக்கு நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சி இதனை தெரிவித்துள்ளது.

ஏனைய மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கவுள்ளது.

மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாடசாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு பொது தேர்தலுக்கு பாடசாலைகளை தயார்ப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்குவதற்கு சகல பாடசாலை அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் ஜூலை மாதம் 28 ,29, 30, 31 ஆம் திகதிகள் பாடசாலையில் தங்கியிருக்க வேண்டும்.

குறித்த கால பகுதியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் கலந்துரையாடி தேர்தல் நடவடிக்கைக்காக பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.