(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜ பெரமுனவின் வெற்றிக்கு தமிழ் - முஸ்லிம் சமூகத்தினர் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். சிறந்த அரசியல் முறைமையினை கட்டியெழுப்ப வேண்டுமாயின் பாரம்பரியமான கருத்து முரண்பாடுகளை துறக்க வேண்டும்.

ராஜபக்ஷர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் நிலைப்பாடு தவறானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இடம் பெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெறுவதற்கு அனைத்து இன மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். தமிழ் - மு;ஸ்லிம் மக்களின் ஆதரவு கட்டாயமானது.

சிறந்த அரசியல் செயலொழுங்கை கட்டியெழுப்ப வேண்டுமாயின் பாரம்பரியமாக குறிப்பிட்டுக் கொள்ளும் குற்றச்சாட்டுக்கள் மறக்கப்பட வேண்டும்.

ராஜபக்ஷர்களின் ஆட்சி தொடர்பில் தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் காணப்படும் நிலைப்பாடு தவறானது. முப்பது வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது. அல்ல தீவிரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி பணிகளை துரிதமாக முன்னெடுத்தார். கடந்த அரசாங்கத்தில் எவ்வித அபிவிருத்தி பணிகளும் சுயமாக வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படவில்லை. போலியான வாக்குறுதிகள் மாத்திரமே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டன.

இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்- முஸ்லிம் சமூகத்தினர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கவில்லை. தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் சுய இலாபத்திற்காக ராஜபக்ஷர்களுக்கு எதிரான அரசியல் பிரச்சாரங்களை ஆரம்பத்தில் இருந்து முன்னெடுத்தார்கள். வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் தவறான சித்தரிப்புக்களையே இன்றும் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கிறார்கள்.

ஜனாதிபதி அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராகவே செயற்படுகிறார். அரசியல் கட்சிகளை இலக்காக கொண்டு அவர் செயற்படவில்லை.

தமிழ் - முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக முன்வைக்கும்குற்றச்சாட்டுக்களை விடுத்து யாதார்த்த நிலைமையினை புரிந்துக் கொண்டு சிறந்த அரசாங்கத்தை உருவாக்க ஒன்றுப்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது.

இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பலமான அரசாங்கத்தை தோற்றுவிக்கும் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.

பாராளுமன்றத்தில் அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்தவப்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்த்ரமே தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும். என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.