கொரோனா வைரஸ் தொற்றால் அவுஸ்திரேலியாவில் நடைபெற இருந்த ஐசிசி T20 ஆண்கள் உலக கிண்ணத்தொடர் 2022-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் T20 உலக கிண்ணம் ஒக்டோபர் - நவம்பரில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்த சாத்தியமில்லை என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை வெளிப்படையாக கடந்த மாதமே தெரிவித்தது.

ஆனால் ஐசிசி அதன்பின் இரண்டு முறை கூடியது. அப்போது T20 உலக கிண்ணம் குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது.

ஐசிசி T20 உலக கிண்ணம் 2021-ல் ஒக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 14-ல் நடக்கும் என்றும், 2022-ம் ஆண்டு T20 உலக கோப்பை ஒக்டோபர் - நவம்பரில் நடைபெறும் எனவும், இறுதிப் போட்டி நவம்பர் 13-ம் திகதி நடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கிண்ணம் இந்தியாவில் ஒக்டோபர் - நவம்பரில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 26-ம் திகதி நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.