இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி சற்று நேரத்துக்கு முன்னர் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கட் தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தமதாக்கிக் கொண்டுள்ளது.

4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தமது முதலாம் இன்னிங்சில் இங்கிலாந்தை விட 310 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி மீண்டும் துடுப்பெடுத்தாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால், பாகிஸ்தான் அணி நேற்று தனது 2-வது இன்னிங்சை ஆடத்தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷான் மசூத் மற்றும் அபித் அலி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் ஷான் மசூத் 18 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பிராட் பந்து வீச்சிலும் அபித் அலி 42 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆண்டர்சன் பந்துவீச்சிலும் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தலைவர் அசார் அலி மற்றும் பாபர் அசாம் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் அணி 56 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து 100 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் 4-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அசார் அலி 29 ஓட்டங்களுடனும் பாபர் அசாம் 4 ஓட்டங்களுடனும் களத்தில் இருற்தனர்.

இதனடிப்படையில் நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பாக். அணி 8 விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்தை விட 210 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இருந்தது. 

இந்த நிலையிலேயே போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. இன்று ஆட்டம் வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வரும் சந்தரப்பத்தில் தமது இரண்டாம் இன்னிங்சுக்காக ஆடி வந்த பாக். அணி 04 விக்கட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்றிருந்தது. 

பாக். அணி சார்பில் பாபர் அசாம் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் அண்டர்ஷன் 03 விக்கட்டுகளை கைப்பற்றிருந்தார். 

போட்டியின் சிறப்பாட்டக்காரராக முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து அணியின் செக் குரோலி (Zak Crawley) தெரிவு செய்யப்பட்டார். போட்டித் தொடரின் நாயகர்களாக இங்கிலாந்து அணியின் விக்கட் காப்பாளர் ஜொஸ் பட்லரும் (Jos Buttler), பாகிஸ்தான் அணியின் விக்கட் காப்பாளர் மொஹமட் ரிஸ்வானும் தெரிவு செய்யப்பட்டனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.