12 ஆவது மரணமான பெண் : இந்தியாவுக்கு சிகிச்சைக்காக சென்று நாடு திரும்பியவர்

எம்.ஏ.எம். அஹ்ஸன்

நள்­ளி­ரவு தாண்டி நித்­தி­ரைக்கு தயா­ராகிக் கொண்­டி­ருந்த பவ்ஸுல் இஹ்­ஸானின் செவி­களில் அவ­ரது அன்பு மனைவி பாத்­திமா ரிஸா­னாவின் மரணச் செய்­தியே வந்­த­டைந்­தது. நிலை குலைந்து போன அவர் தனது பிள்­ளை­க­ளுக்கு தாயா­கவும் தனக்கு சிறந்த மனை­வி­யா­கவும் இருந்த அவ­ரு­ட­னான நினை­வு­களை மீட்­டி­ய­வாறே ஜனா­ஸாவை எப்­ப­டி­யா­வது பார்த்து விட வேண்டும் என்ற ஒரே­யொரு ஆவ­லுடன் கண்­ணீ­ருடன் காத்­தி­ருக்­கின்றார்.

இல்­லத்­த­ர­சி­யான 46 வய­தான பாத்­திமா ரிஸா­னா­வுக்கு 2018 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் புற்­றுநோய் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. இலங்­கையில் சுமார் எட்டு மாத கால­மாக புற்று நோய்க்­காக சிகிச்­சை­களை எட்டு கட்­டங்­க­ளாக இவர் மேற்­கொண்டு வந்தார். இலங்­கையில் உள்ள சிகிச்­சைகள் பய­ன­ளிக்­காத கார­ணத்­தினால் கடந்த வருடம் நவம்பர் 21 அன்று மேல­திக சிகிச்­சை­க­ளுக்­காக பாத்­திமா ரிஸானா தனது கன­வ­ருடன் இந்­தி­யா­வுக்குச் சென்றார்.

குடும்ப உறுப்­பி­னர்கள் இருவர் சகிதம் இவர்கள் இந்­தியா சென்­ற­போது உலகில் கொரோனா அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. இந்த நிலை­யி­லேயே மிகவும் சிக்­க­லான சத்­திரி சிகிச்­சை­களில் ஒன்­றான எலும்பு மச்சை மாற்று அறுவை சிகிச்சை (Bone Marrow Transplant)  யுடன் ஏனைய சிகிச்­சை­களும் கடந்த ஒன்­பது மாத கால­மாக இடம்­பெற்­றன.

“இரு­பதாம் திகதி அதி­கா­லை­யில்தான் இலங்­கைக்கு இரு­வரும் வந்து சேர்ந்தோம். பி.சி.ஆர் பரி­சோ­தனை உட்­பட ஏனைய எல்லா வேலை­க­ளையும் முடித்­துவிட்;டு தனி­மைப்­ப­டுத்தல் ஹோட்­டல்­களில் ஒன்­றான நீர்­கொ­ழும்­புக்கு வந்து சேரவே 11 மணி­யாகி விட்­டது. இரு­வரும் வழமை போல பேசி கதைத்துக் கொண்­டி­ருந்தோம்” என் விடி­வெள்­ளிக்கு இஹ்ஸான் கருத்து தெரி­வித்தார்.

இரவு 8.30 மணி­ய­ளவில் கைக­ளுக்குள் சினுங்­கிய தனது தொலை­பே­சிக்கு பதி­ல­ளித்த இஹ்­ஸா­னுக்கு அதிர்ச்சி காத்­தி­ருந்­தது. தனது மனை­விக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவரை தற்­போது மார­வி­லயில் உள்ள தொற்று நோய்கள் வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அந்த தொலை­பேசி அழைப்பு அறி­வித்­தது. அதிர்ச்­சி­யிலும் கவ­லை­யிலும் உறைந்து போன அவர் இதை தனது மனை­வி­யிடம் தெரி­விக்க சங்­க­டப்­பட்டார்.

தனது மனை­வி­யிடம் தங்­க­ளுக்கு கொவிட் தொற்று ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்று சொல்லும் தைரியம் அவ­ருக்கு இருக்­க­வில்லை. “உங்­கட பி.சி.ஆர். டெஸ்ட்ல சின்ன பிரச்­சி­னையாம். கொஞ்சம் பென்­டிங்ல இருக்காம். நீங்க ஹொஸ்­பி­டல்ல ரெண்டு நாள் நிக்­க­னுமாம்” என்று கூறியே தனது மனை­வியை தேற்­றி­ய­தாக இஹ்ஸான் தெரி­வித்தார்.

புற்று நோயி­லி­ருந்து அவர் நலம் பெற்­றி­ருந்த போதும் ரிஸானா முழு­மை­யாக தேகா­ரோக்­கியம் பெற்ற ஒருவர் கிடை­யாது. அவ­ரு­டைய இதயம் பல­வீ­ன­மா­கவே உள்­ள­தாக இந்­திய வைத்­தி­யர்கள் அறிக்கை வழங்­கி­யி­ருந்­தார்கள். தனி­யாக விடக்­கூ­டிய நிலையில் அவர் இருக்­க­வில்லை. அவ­ரது நீரி­ழி­வினை அடிக்­கடி பரி­சோ­தித்து இன்­சுலின் மற்றும் ஜுஸ் கொடுக்க வேண்டும். சக்­கர நாட்­காலி இல்­லாமல் அவரால் நடக்க முடி­யாது. எதையும் தனித்து செய்ய முடி­யாத உடல் நிலை­யில்தான் ரிஸானா இருந்தார்.

தனக்கு கொவிட் தொற்று இருப்­பதை ரிஸானா அறி­யாத போதும் அன்புக் கண­வரை பிரிந்து செல்ல மன­மில்­லாமல் அழுதார். ‘அல்லாஹ்… எனக்கு போக ஏலா’ என்று சொல்லி அழுத ரிஸா­னாவை ஒரு­வாறு இஹ்ஸான் தேற்­று­வ­தற்கு முயற்சி செய்தார். தானும் கூட வரு­வ­தாக இஹ்ஸான் சொன்ன போதும் அவ­ருக்கு கொவிட் தொற்று இல்லை என்­பதால் அதி­கா­ரிகள் அவரை அனு­ம­திக்­க­வில்லை. உங்­களை விட நாங்கள் பாது­காப்­பாக பார்த்துக் கொள்வோம் என இஹ்­ஸா­னுக்கு ஆறுதல் சொல்லி ரிஸா­னாவை கூட்டிச் சென்­றனர்.

தனக்கு கொவிட் தொற்று இருப்­பதை உணர்ந்து கொண்ட இஹ்­ஸானின் மனைவி மன ரீதி­யாக அதிகம் பாதிக்­கப்­பட்டார். மிகவும் கொடு­மை­யான புற்­று­நோ­யி­லி­ருந்து மிகுந்த போராட்­டத்­திற்கு மத்­தியில் மீண்டு வந்த ரிஸா­னா­வுக்கு இந்த சுமை­யையும் ஏற்­றுக்­கொள்ளும் தெம்பு இருக்­க­வில்லை. கொரோனா சிகிச்­சை­க­ளுக்கு மத்­தியில் இரண்டு முறை மார­டைப்பு எற்­பட்ட ரிஸானா இவ்­வு­லகை விட்டு பிரிந்து சென்றார்! அர­சாங்க தகவல் திணைக்­களம் இலங்­கையில் கொரோ­னாவால் இடம்­பெற்ற 12 ஆவது மர­ண­மாக இவ­ரது மர­ணத்தை வெளி­யி­டு­கின்­றது.

கொவிட்-19 தொற்­றுக்­குள்­ளாகி மர­ணிப்­ப­வர்­களை அடக்கம் செய்­வது தொடர்­பாக கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வெளி­யான வர்த்­த­மானி அறி­வித்­தலில், இலங்­கையில் கொவிட்-19 தொற்று ஏற்­பட்டு மர­ணிப்­ப­வர்கள் அல்­லது கொவிட்-19 கார­ண­மாக மர­ணித்­தி­ருக்­கலாம் என சந்­தே­கிப்­படும் பூத­வு­டல்கள் பொது சுகா­தார சேவைகள் பணிப்­பா­ளரால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஒரு தகன மயா­னத்தில் 800--1200 செல்­சியஸ் வெப்­பத்தில் குறைந்­தது 45 நிமி­டத்­திற்கு எரிக்­கப்­பட வேண்டும் என தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இஸ்­லா­மிய சட்­டத்தின் அடிப்­டையில் ஜனா­ஸாவை எரிப்­பது சம­யத்­திற்கு முர­ணான விடயம் என்­பதால் முஸ்லிம் ஜனா­ஸாக்­களை இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்ய அனு­மதி வழங்க வேண்டும் என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உட்­பட இலங்கை முஸ்லிம் மக்கள் இஸ்­லா­மிய அமைப்­புகள் என பல்­வேறு பகு­தி­களில் இருந்தும் அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றன. சமூக வலை­த­ளங்­க­ளிலும் ஊட­கங்­க­ளிலும் பெரி­ய­ளவில் விவா­திக்­கப்­படும் ஒரு விட­ய­மாக இந்த ஜனாஸா எரிப்பு விவ­காரம் இருந்து வரு­கின்­றது.

தனது மனை­வியின் இழப்பை தாங்­கிக்­கொள்ள முடி­யாத இஹ்­ஸா­னுக்கு அடுத்த பிரச்­சி­னை­யாக இருந்­தது ஜனா­ஸாவை நல்­ல­டக்கம் செய்யும் இந்த விட­யம்தான். என்ன முயற்சி செய்­தாலும் ஜனா­ஸாவை எரிப்­பது நிச்­சயம் என்­பது அவ­ருக்கு ஓர­ளவு உறு­தி­யாக இருந்­தது. இஹ்­ஸானும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்ற நிலையில் தனது மனை­வியின் முகத்தை கடை­சி­யாக ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை கானல் நீராகக் கூடா­தென எண்ணம் ஓடிக்­கொண்­டி­ருந்­தது.

தனது மனை­விக்கு ஏற்­பட்ட கொரோனா தொற்று ஏன் என்னை தாக்­க­வில்லை என்ற கேள்வி இந்த நேரத்தில் இஹ்­ஸா­னுக்கு எழுந்­தது. தனது சந்­தே­கத்தை இஹ்ஸான் உரிய அதி­கா­ரி­க­ளிடம் வெளிப்­ப­டுத்­தினார். உண்­மையில் தனது மனை­வியின் மர­ணத்­திற்கு கொரோனா தொற்­றுதான் காரணம் என மர­ணத்தில் சந்­தேகம் எழுப்­பினார் அவர்! அதி­கா­ரிகள் பி.சி.ஆர் பரி­சோ­த­னையின் மூலப்­பி­ர­தி­களை காட்­டி­யி­ருந்த போதும் தனது மனை­வியின் உடலை ஊடற்­கூ­றாய்வு பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­மாறு இஹ்ஸான் கேட்­டுக்­கொண்டார்.
கொரோனா தொற்று ஏற்­பட்டு மர­ணித்­த­வரை உடற்­கூ­றாய்வு பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தும்­போது மருத்­துவ அதி­கா­ரிகள் பாதிக்­கப்­படும் அதே­வேளை சுற்­றுச்­சூழல் அச்­சு­றுத்­தலும் எற்­படும் என்ற கார­ணத்­தி­னா­லேயே உடற்­கூ­றாய்வு பரி­சோ­த­னைக்கு மறுப்பு தெரி­விக்­கப்­பட்­டது. என்­ற­போ­திலும் இஹ்ஸான் மர­ணத்தில் சந்­தே­கத்தை வெளிப்­ப­டுத்­தவே அதி­கா­ரிகள் இந்தப் பிரச்­சி­னையை தீர்க்க முன்­வந்­தனர்.

இஹ்­ஸானின் வேண்­டு­கோ­ளுக்குப் பின்னர் பொது மருத்­துவ அதி­கா­ரிகள் சங்கம் மற்றும் தொற்­று­நோய்கள் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் என்­ப­வர்­களின் பரிந்­து­ரையின் பேரில் ஜனா­ஸாவின் நுரை­யீரல் மற்றும் இத­யத்தின் ஒரு பகு­தியின் மாதி­ரியை எடுத்து பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்தி கொரோ­னாவின் பாதிப்பு அதிகம் ஏற்­பட்­டுள்­ளதா அல்­லது இதர கார­ணங்­களால் அதி­க­மான பாதிப்பு இருக்­கின்­றதா என்­பதை அவ­தா­னிக்­கலாம் என இஹ்­ஸா­னுக்கு தெரி­விக்­கப்­பட்­டது.

ஜனா­ஸாவை எரிப்­ப­தற்கு முன்னர் உடற்­கூ­றாய்வு பரி­சோ­த­னைக்கு மாற்­ற­மாக இவ்­வா­றான ஒரு சந்­தர்ப்­பத்­தினை மருத்­துவ நிர்­வாகம் வழங்­கிய போதும் அதை செய்ய இஹ்ஸான்  விரும்­ப­வில்லை. இது தொடர்­பாக விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­வித்த அவர் “ஜனா­ஸா­வுக்கு அதிகம் வேத­னை­களை கொடுக்­கக்­கூ­டாது என்ற கார­ணத்­திற்­காக அவர்கள் தந்த வாய்ப்பை நான் பயன்­ப­டுத்­த­வில்லை“ என்றார்.

ஆனால் இப்­போது வரை எனக்கு கொரோனா அறி­கு­றிகள் எதுவும் இல்லை” என இஹ்ஸான் தெரி­வித்தார்.
சமூக வலை­த­ளங்­களில் ஒரு ஜனா­ஸாவை வைத்­துக்­கொண்டு லைக்ஸ்­களை அள்­ளு­வ­தற்கு ஒரு கூட்­டமும் அர­சியல் இலாபம் அடைய இன்­னொரு கூட்­டமும் பார்த்­துக்­கொண்­டி­ருந்த வேளையில் மனை­வியை இழந்த  கண­வனும் தாயை இழந்த நான்கு பிள்­ளை­களும் தமது உறவை ஜனா­ஸா­வா­க­வா­வது ஒரு முறை பார்த்­து­விட வேண்டும் என துடித்­தனர்.

இந்­நி­லையில் இஹ்ஸான் மற்றும் அவ­ரது உற­வி­னர்கள் என சக­ல­ருக்கும் ஜனாஸா தொழு­கையை நிறை­வேற்­று­வ­தற்கும் ஜனா­ஸாவை சுகா­தார நெறி­மு­றை­களை பேணி பார்­வை­யி­டு­வ­தற்கும்  சுமார் 60 பேர் ஜனாஸா தொழு­கையில் கலந்து கொள்­வ­தற்கு அர­சாங்கம் அனு­மதி வழங்­கி­யது. இதன்­போது ஐ.டி.எச் நிர்­வாகம் தன்னை உணர்வு ரீதி­யாக அனு­ச­ரித்­த­தாக இஹ்ஸான் மனம் திறக்­கிறார்.

இஹ்ஸான் தனி­மைப்­ப­டுத்தல் விடு­தியில் இருந்து இலங்கை இரா­ணு­வத்­தி­னரால் தகன மயா­னத்­திற்கு அழைத்து வரப்­பட்டார். பாது­காப்­பான முறையில் ஜனா­ஸாவை பார்­வை­யிட ஜனாஸா தொழ அவ­ருக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டது. தகனம் செய்யும் இடம் வரை செல்­வ­தற்கு இஹ்­ஸா­னுக்கு அனு­மதி வழங்­கப்­பட்ட போதும் அவர் தனது உறவின் உடல் எரிந்து சாம்­ப­லா­கு­வதை பார்க்கத் துணி­வில்­லாமல் அதை மறுத்­து­விட்டார். ஜனாஸா தொழுகை தொழு­விக்­கப்­பட்ட ரிஸா­னாவின் ஜனாஸா அக்­கி­னியில் சங்­க­ம­மா­னது.
“இலங்கை இரா­ணு­வத்­தினர் நல்ல முறையில் எங்­களை நடத்­தி­னார்கள். ஐ.டி.எச் நிர்­வா­கத்­திற்கு அல்லாஹ் நற்­கூலி வழங்க வேண்டும். எனது மனை­வியை அவர்கள் நல்ல முறையில் பார்த்­துக்­கொண்­டார்கள். இலங்­கையில் கொரோ­னாவால் மர­ணித்த ஏனைய ஜனா­ஸாக்­களின் உற­வி­னர்­க­ளுக்கு வழங்­காத சலு­கை­களை அர­சாங்கம் வழங்­கி­யி­ருக்­கின்­றது. அதற்கு நன்­றிகள். ஜனாஸா எரிக்­கப்­பட்­டது எங்­க­ளுக்கு கவ­லைதான். ஆனால் நாட்டின் சட்ட திட்­டங்­க­ளுக்கு கட்­டு­பட்டு நாங்கள் இந்த முடிவை மதிக்­கிறோம்” என இஹ்ஸான் தெரி­விக்­கின்றார்.

இஹ்­ஸானின் சகோ­தர உற­வுகள் மற்றும் ரிஸா­னாவின் உற­வி­னர்கள் என பலரும் உலமா சபை, அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் முக்­கிய பிர­மு­கர்கள் என பல­ருடன் கலந்­து­ரை­யாடி ஜனா­ஸாவை எரிக்­காமல் அடக்கம் செய்­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­ட­னர. “ஜனா­ஸாவை கையில் தர வேண்டாம். எங்­கே­யா­வது ஒரு இடத்தில் அடக்கம் செய்து விடுங்கள்” என்று இஹ்ஸான் கேட்­டி­ருந்தார். ஆனால் என்­னதான் இருந்­தாலும் வர்த்­த­மா­னியில் வெளி­யான ஒரு விட­யத்தை மருத்­துவ அதி­கா­ரிகள் நடை­மு­றைப்­ப­டுத்த கட­மைப்­பட்­டுள்­ளனர் என்­பதால் அவை பய­னற்றுப் போயின.

“எவ்­வா­றாக இருந்­தாலும் ஐ.டி.எச் இன் சேவைகள் மற்றும் எங்­களை கவ­னித்துக் கொண்ட விதம் என்­பன எனக்கு ஆறு­த­லாக உள்­ளது. வைத்­தி­யர்கள் ஊழி­யர்கள் இரா­ணுவ வீரர்கள் எங்­க­ளது உணர்­வு­க­ளுக்கு மதிப்பு கொடுத்­தற்கு நன்றி” என இஹ்ஸான் தெரி­விக்­கின்றார்.  

இறு­தி­யாக மர­ணித்­த­வரின் ஜனா­ஸாவும் எரிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து  ஜனாஸா எரிப்பு விடயம் மீண்டும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. பலரும் சமூக வலைத்­த­ளங்­களில் தமது கண்­ட­னத்தை வெளிப்­ப­டுத்­தினர். புதி­தாக தெரி­வான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இது­வி­ட­யத்தில் அசட்­டை­யாக இருப்­ப­தாக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தனர். எனினும் இது தொடர்­பான வர்த்­த­மானி அறிவித்தலில் மாற்றங்களைச் செய்வதற்கான எந்தவித சாதகமான சமிக்ஞைகளையும் இதுவரை காணமுடியவில்லை

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று நண்பகல் வரை 2984 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2830 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 11 பேர் இன்னமும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று என்ற சந்தேகத்தின் பேரில் 83 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனா தொற்றினால் இறந்து போகின்றவர்கள் இந்து, இஸ்லாம், பௌத்தம், கிறிஸ்தவம் என எந்த சமயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு தொற்று இருப்பதை நூறு வீதம் உறுதி செய்யக் கூடிய பொறிமுறைகளை அரசாங்கம் கையாள வேண்டும் என இஹ்ஸான் கேட்டுக் கொண்டார்.

மேலும் ஜனாஸா எரிப்புக்கு எதிராக போராடுவதால் எந்த பயனும் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. வர்த்தமானியில் இவ்வாறனதொரு விடயம் சட்டமாக்கப்பட்டிருக்கின்றது. எனவே முயற்சிப்பதால் வீணான சிரமம்தான் ஏற்படும் என உயிரிழந்த ரிஸானாவின் மகன் ஆக்கில் அஹமட் தெரிவிக்கின்றார்.

எம்.ஏ.எம்.அஹ்ஸன்
 ஊடகவியலாளர் (விடிவெள்ளி)
 28.08.2020

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.