(அரசாங்க தகவல் திணைக்களம்)

நாட்டில் 19 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்று அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சமிபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைவாக இந்நிலை படிப்படியாக அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக இருப்பதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.


குறித்த வயது பிரிவைச் சேர்ந்த சுமார் மூவாயிரத்து 600 பேர் இவ்வருடத்தில் பதிவாகியுள்ள போதும் சுமார் 2 ஆயிரம் பேர் மாத்திரம் சிகிச்சை பெறுவதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

இந்த மோசமான நிலைமை அண்மைக் காலங்களாக படிப்படியாக அதிகரிப்பதாக தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

அறிவியல் கணக்கெடுப்பின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3,600 எச்ஐவி தொற்றுக்குள்ளானோர் இருத்தல் வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை 2,000 பேர் வரையிலேயே கிளினிக்கிற்காக பதிவு செய்துள்ளனர். .இதனால் ஆரோக்கியமானவர்களும் இத்தகையோரால் பாதிக்கப்படக்கூடும் எனவும் தேசிய பாலியல் நோய் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கிளினிக்கிற்காக வருகை தரும் எச்ஐவி நோயாளர்களை பாதுகாக்குமாறும் குருதி பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்ளுமாறும் விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி வைத்திய நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போதைய நிலைமை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏறிபடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படவிருப்பதாக விசேட வைத்திய நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.