எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை ஐக்கிய மக்கள் சக்தி மிகுந்த பலத்துடன் எதிர்கொள்ளும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தத்தின் ஊடாக மைத்திரிபால சிறிசேனவிற்கு பதவியும் பசில் ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றத்திற்கு நுழையும் வாய்ப்பும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு திருத்தைத்தை கொண்டுவருவதாயின் தாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை எனவும் அவ்வாறு இல்லாவிடின் தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.