2020.08.26 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

01. வாழ்க்கைச் செலவு தொடர்பாக அமைச்சரவை உப குழுவொன்றை நியமித்தல்

சந்தையில் நிலவும் கோரிக்கை மற்றும் விநியோக ஏற்ற இறக்கங்கள், காலநிலை தாக்கம் பருவகால உற்பத்திகள் தயாரிப்பாளர்களினால் இடம்பெறும் மாற்றம், சர்வதேச சந்தையில் விலைகள் போன்ற விடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வாழ்க்கைச் செலவை நிலையானதாக முன்னெடுப்பதற்கு தேவையான கொள்கை மற்றும் நடைமுறைத்தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையிலும் கௌரவ பிரதமர் அவர்களினதும், வர்த்தக அமைச்சர் அவர்களினதும் விவசாய அமைச்சர் அவர்களினதும் கடற்றொழில் அமைச்சர் அவர்களினதும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்களினதும் அங்கத்துவத்துடனான வாழ்க்கைச் செலவு தொடர்புடனான அமைச்சரவை துணைக்குழுவை நியமிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த துணைக்குழுவின் பணிகளுக்காக கீழ் குறிப்பிடப்பட்ட இராஜாங்க அமைச்சர்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 நெல் மற்றும் தானியம் சேதனப் பசளை உற்பத்தி உணவுப்பொருட்கள், மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம் மற்றும் கிழங்கு உற்பத்தி மேம்பாடு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சர் அவர்கள்
 கூட்டுறவு சேவை, விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்கள்
 தெங்கு, கித்துள், பனை மற்றும் இறப்பர் உற்பத்தி அபிவிருத்தி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விவசாய பொருட்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி விரிவாக்க இராஜாங்க அமைச்சர் அவர்கள்

02. கொம்பனித் தெரு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் உத்தராநந்த மாவத்தையில் ரயில் பாதைக்கு மேலாக மேம்பாலத்தை நிர்மாணித்தல்

கொம்பனித் தெரு பிரதேசத்தில் உத்தராநந்த மாவத்தை மற்றும் நீதிபதி அக்பார் மாவத்தை ஊடாக ரயில் பாதை அமைந்துள்ளதினால் அலுவலக நேரங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த நிலைமையை தவிர்ப்பதற்காக மேம்பாலத்தை நிர்மாணித்து ஒரு திசையில் வாகனங்கள் செல்லும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், இதன் கீழ் 03 மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்காக பொருத்தமான தகுதியைப் பெறும் உள்ளுர் ஒப்பந்தக்காரர்களிடமிருந்து கேள்வி மனுக்களை கோருவதற்காக பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. நிதி அமைச்சினால் வெளிடப்பட்டுள்ள அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

கீழ்கண்ட அறிக்கை நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதுடன் இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

i. முழுமையான தேர்தல் வரவு செலவு நிலைமை தொடர்பான அறிக்கை

2003 ஆம் ஆண்டு இல 3 இன் கீழான அரச நிதி முகாமைத்துவம்
(பொறுப்பு) சட்டத்தின் 16(2) சரத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய புதிய பாராளுமன்றத்தில் முதலாவது கூட்டத் தொடர் நடத்தப்பட்டு 2 வார காலப்பகுதிக்குள் நிதி அமைச்சர் அவர்களினால் முழுமையான தேர்தல் தொடர்பான வரவு செலவு நிலைமை குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ii. 2019 ஆம் ஆண்டு நிதி அமைச்சின் வருடாந்த அறிக்கை

2003 ஆம் ஆண்டு இலக்கம் 3 இன் கீழான அரச நிதி முகாமைத்துவம் (பொறுப்பு கூறல்) சட்டத்தின் 13 ஆவது சரத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய நிதி ஆண்டு நிறைவடைந்த பின்னர் 05 மாதங்கள் செல்தற்கு முன்னர் இறுதி வரவு செலவு நிலைமைத் தொடர்பான அறிக்கை நிதி அமைச்சர் அவர்களினால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் அத்தோடு அதன் பின்னர் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

iii. 2020 ஆம் ஆண்டு மத்திய காலப்பகுதியில் அரச நிதி நிலைமை தொடர்பான அறிக்கை

2003 ஆம் ஆண்டு இல 3 இன் கீழான அரச நிதி முகாமைத்துவம் (பொறுப்புக்கூறல்) சட்டத்தின் 10 ஆவது சரத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய வருடத்தின் மத்திய காலப்பகுதியில் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை அனைத்து நிதி ஆண்டிலும் ஜுன் மாதம் இறுதி நாளுக்குள் நிதி அமைச்சர் அவர்களினால் பொது மக்களுக்கு வெளியிட்டு அதனைத் தொடர்ந்து அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

iv. இலங்கை மத்திய வங்கி அறிக்கை 2019

நிதி நீதி சட்டத்தின் 35ஆவது சரத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் நிதி சபையினால் பொருளாதாரத்தின் நிலைமை, இலங்கை மத்திய வங்கியின் நிலைமை மற்றும் வருடத்தில் நிதி சபையினால் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கிய அறிக்கையொன்று அடுத்த ஆண்டு ஆரம்பமாகி 4 மாத காலப்பகுதிக்குள் நிதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அத்தோடு அதன் பின்னர் அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

04. இலங்கை மத்திய வங்கியின் இருப்பு மேலாண்மைக்கான தரவு முகாமைத்துவ கட்டமைப்பொன்றுக்கான பெறுகையை மேற்கொள்ளுதல்

நாட்டில் வெளிநாட்டு இருப்பு மேலாண்மையில் தற்பொழுது நிலவும் தேவையை பூர்த்தி செய்வதைப் போன்று சேமிப்பை அதிகரிப்பதற்காக பயனுள்ள வகையில் வசதிகளை செய்யக்கூடிய வகையில் புதிய தரவு முகாமைத்துவ கட்டமைப்பொன்றை பெறுகைக்கான நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவையினால் 2019 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இதன் தரவு முகாமைத்துவ கட்டமைப்பு வழங்கி ஸ்தாபித்து, நடைமுறைப்படுத்தி முன்னெடுப்பதற்காக சர்வதேச போட்டித் தன்மையின் அடிப்படையில் கேள்வி மனு கோரப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவினால் இந்த கேள்வி மனு தொடர்பில் சமர்பிக்கப்பட்டுள்ள சிபாரிசு மற்றும் உத்தேச பெறுகை தொடர்பில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் கருத்துக்களை தெரிவித்தல் மற்றும் சிபாரிசுகளை கவனத்தில் கொண்டு இதன் பெறுகையை சிங்கப்பூரில் SimCorp Pte. Limited என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக நிதி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

05. வர்த்தமானி அறிவிப்புக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பித்தல்

கீழ் குறிப்பிடப்பட்ட சட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளுக்கு அமைய வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

i. 2011 ஆம் ஆண்டு இலக்கம் 18 இன் கீழான துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 05 வர்த்தமானி அறிவிபு;புக்கள்.
ii. 1989ஆம் ஆண்டு இல 13 கீழான உற்பத்தி வரி (விசேட ஒழுங்கு விதிகள்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 09 வர்த்தமானி அறிவிப்புக்கள்.
iii. கலால் வரி கட்டளைச் சட்டத்தின் கீழ் (52 ஆவது அதிகாரம்) கீழ் வெளியிடப்பட்டுள்ள 10 வர்த்தமானி அறிவிப்புக்கள்.
iv. 2006 ஆம் ஆண்டு இல 11 நிதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 01 வர்த்தமானி அறிவிப்பு.
v. 2012 ஆம் ஆண்டு இல 12 கீழான நிதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒரு வர்த்தமானி அறிவிப்பு.
vi. 2018 ஆம் ஆண்டு இல 35 நிதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 01 வர்த்தமானி அறிவிப்பு
vii. 1962 ஆம் ஆண்டு இல 19 வருமான பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 06 வர்த்தமானி அறிவிப்புக்கள்.
viii. சுங்க கட்டளைச் சட்டம் (235 வது அதிகாரம்) கீழ் வெளியிடப்பட்டுள்ள 03 வர்த்தமானி அறிவிப்புக்கள்.
ix. 2007 ஆம் ஆண்டு இலக்கம் 48 கீழான விசேட வர்த்தக பொருட்கள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்;ள 31 வர்த்தமானி அறிவிப்புக்கள்.
x. 2017ஆம் ஆண்டு இல 12 இன் கீழான வெளிநாட்டு நாணய சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 05 வர்த்தமானி அறிவிப்புக்கள்.

06. இரசாயன உரத்தை கொள்முதல் செய்தல் - 2020 பெரும்போகம் அக்டோபர் மாதத்தில் விநியோகித்தல்

வரையறுக்கப்பட்ட இலங்கை உர நிறுவன் (லக்போர) மற்றும் வரையறுக்கப்பட்ட கொழும்பு கொமர்ஷல் கொழும்பு நிறுவனம் (கொமர்ஷல் உரம்) 2020ஆம் ஆண்டு பெரும்போகம் அக்டோபர் மாதத்தில் விநியோகிக்கப்படவுள்ள இரசாயன உர இறக்குமதிக்காக பகீரங்க போட்டித்தன்மையுடனான விலை மனு கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசை கவனத்தில் கொண்டு கீழ் குறிப்பிடப்பட்ட வகையில் பெறுகையை மேற்கொள்வதற்காக விவசாய அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 லக்போர மற்றும் கொமர்ஷல் உர நிறுவனத்திற்காக ஒரு மெற்றிக் தொன் அமெரிக்க டொலர் 236.44 என்ற அடிப்படையில் மியுரெட் பொடேவ்; (சிவப்பு, ரோஸ் மற்றும் வெள்ளை ) 2000010_5மூ வெலன்சி இன்டர்நெஷனல் ட்ரேடிங் பிரைவேட் லிமிடட் நிறுவனத்திடமும்

 கொமர்ஷல் உர நிறுவனத்திற்காக ஒரு மெற்றிக் தொன் 236.44 அமெரிக்க டொலர்கள் வீதம் மியுரேற் ஒப் பொட்டேஜ் ( சிவப்பு ஃ ரோஸ்) 2000 10_5மூ மெற்றிக் தொன்னை வெலன்சி இன்டர்நெஸனல் பிரைவேட் லிமிட்டடிடமும் பெற்றுக்கொள்ளுதல்
மேலும் பெறுகை மேன்முறையீட்டு சபையின் சிபாரிசுக்கமைய 2020 பெரும்போகத்தில் செட்டெம்பர் மாதத்திற்கான, லக்போர மற்றும் கொமர்ஷல் உர நிறுவனத்திற்காக ட்ரிபல் சுபர் பொஸ்பேட் உரு மெற்றிக் தொன்னை அமெரிக்க டொலர் 241.00 என்ற வீதம் 8, 7700 10_5மூ மெற்றிக் தொன் பெறுகைக்காக கல்ப் வ்ர்ட் இன்டர்நெஷனல் இன்வெஸ்டர் என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

07. வரிக் கொள்கை திருத்த பொருளாதாரத்தை மீளக்கட்டியமைப்பதற்கான கொள்கை ரீதியிலான நடவடிக்கைகள்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைவாக நுகர்வோர், உழைக்கும் மக்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வரி செலுத்தும் சமூகத்தினர் உள்ளிட்ட பொருளாதாரத்தின் அனைத்து தரப்பினருக்கும் பொருத்தமான வகையில் பரந்துபட்ட ஒழுங்குவிதிகளைக் கொண்டதும் செயல்திறன் மிக்க வரிக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதேபோன்று உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் சேவையில் ஈடுபட்டவர் தொடர்பில் கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக குறைந்த வருமானத்தைக் கொண்டவர்கள், சுற்றுலாத்துறையைச் சார்ந்தவர்கள், தொழில் முயற்சியாளர்கள், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பொருளாதாரத்தின் அனைத்து தரப்பினருக்கும் அரச நிதி மற்றும் நிதி ரீதியில் ஊக்குவிப்பதற்கும் அரசாங்கத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில்முயற்சியாளர் மீது சுமத்தப்பட்டுள்ள நிதி சுமையை தளர்வுபடுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் நிதி சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் காரணமாக 2020ஆம் ஆண்டில் 2ஆவது காலாண்டு பகுதியில் பொருளாதாரம் மீண்டும் வழமை நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இதற்கு அமைவாக கீழ் கண்ட சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக சட்ட திருத்த வகுப்பு பிரிவினால் வகுக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை அரசாங்கத்தின் வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

i. 2019 ஆம் ஆண்டு இல 9 இன் கீழான நாட்டைக் கட்டியெழுப்பும் வரி சட்டம்
ii. 2006 ஆம் ஆண்டு இல 13 பொருளாதார சேவை கட்டண சட்டம்
iii. 2011 ஆம் ஆண்டு இல 18 துறைமுக மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி வரி சட்டம்
iv. 2018 ஆம் ஆண்டு இல 35 நிதி சட்டம்
மேலும் கீழ் குறிப்பிடப்பட்ட சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தேவையான திருத்த சட்டமூல வகுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1. 2017 ஆம் ஆண்டு இல 24 உள்ளூர் வருமான சட்டம்
2. 2002 ஆம் ஆண்டு இல 14 பெறுமதி சேர்க்கப்பட்டதின் அடிப்படையிலான சட்டம்

08. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி தேசிய மின்சக்தி கட்டமைப்பில் ஏற்பட்ட முழு அளவிலான துண்டிப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி தேசிய மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட முழு அளவிலான துண்டிப்பு தொடர்பாக கண்டறிந்து அறிக்கையிடுவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை அமைச்சரiயின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. நடவடிக்கை மற்றும் பராமரிப்பு நடவடிக்கைளுக்கான இடர் முகாமைத்துவ நடைமுறையொன்று தற்பொழுது நடைமுறையில் இல்லை என்று குழுவினால் அடையாளங்காணப்பட்டுள்ளது. அத்தோடு அனர்த்தத்தை தவிர்ப்பதற்காக மிகவும் நம்பகத்தன்மையுடனான செயற்பாடு மற்றும் பராமரிப்பு முறையொன்று இருப்பதன் தேவை உள்ளிட்ட மேலும் 11 சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 2020.08.17 அன்று நாடு முழுவதும் இடம்பெற்ற மின்சார துண்டிப்பின் போது அந்த சந்தர்ப்பத்தில் கெரவலப்பிட்டிய உப மின்நிலையத்தின் பொதுவான பராமரிப்புக்கு பொறுப்பாக இருந்த அதிகாரியின் தாமதத்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக குழுவினால் அறிக்கையிடப்பட்டுள்ளது. மேலும் மேற்குறிப்பிட்ட குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், எதிர்காலத்தில் இந்த ஆய்வின் மூலம் செய்யப்படும் சிபாரிசை நடைமுறைப்படுத்தல் மற்றும் அதன் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முதலீடுகள் தொடர்பாக மதிப்பீட்டுடன் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்துவதற்கு துரிதமாக செயற்படுவதாகவும் மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

- அரசாங்க தகவல் திணைக்களம் -

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.