இம்முறை பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 71% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கொவிட் 19 தொற்று காரணமாக விதிக்கப்பட்டிந்த சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக தேர்தல் இடம்பெற்ற காரணமாக 10 மணித்தியாலங்கள் வாக்குப்பதிவு இடம்பெற்றது.

பல மாவட்டங்களில் வாக்களிப்பு விகிதம் 70 % விட அதிகரித்திருந்தது.

இம்முறை குருணாகலை, காலி, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் குறைந்தளவான வாக்குகள் பதிவாகியிருந்தன.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் தமது வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு வருகை தந்த அனைத்து வாக்காளர்களுக்கும் விசேடமாக தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், சுகாதார வழிகாட்டலை தயாரித்து தந்து ஆரோக்கியமான தேர்தல் ஒன்றினை நடாத்துவதற்கு ஆதரவினை பெற்றுத் தந்த சுகாதார பிரிவினருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், வாக்குப்பதிவின் போது எவ்வித கடுமையான பிரச்சினைகளும் ஏற்படவில்லை என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இன்று மாலை 05 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,

நுவரெலியாவில் 75%
மொணராகலையில் 74%
பதுளையில் 74%
திருகோணமலையில் 74%
ஹம்பாந்தோட்டையில் 73%
வன்னியில் 73%
இரத்தினபுரியில் 73%
கொழும்பில் 72%
திகாமடுல்லையில் 72%
மட்டக்களப்பில் 72%
மாத்தறையில் 71%
களுத்துறையில் 71%
மாத்தளையில் 71%
பொலன்னறுவையில் 71%
கண்டியில் 71%
அனுராதபுரத்தில் 71%
கேகாலையில் 71%
கம்பஹாவில் 69%
குருணாகலையில் 69%
காலியில் 69%
யாழ்ப்பாணத்தில் 64%
புத்தளத்தில் 63%

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.