இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்ஷன் 600 டெஸ்ட் விக்கட்டுக்களை கைப்பற்றிய முதலாவது வேகப்பந்து வீச்சாளராக கிரிக்கட் வரலாற்றுப் புத்தகத்தில் தனது பெயரை பதித்துள்ளார்.

38 வயதான இவர் பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்று வருகின்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளாட்டத்தின் போது பாக். அணியின் தலைவர் அசார் அலியின் விக்கட்டினை கைப்பற்றியதை அடுத்தே இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார்.

அதேவேளை 600 விக்கட்டுகளை கைப்பற்றியவர்கள் வரிசையில் இவர் நான்காம் நபராக இணைந்துக் கொள்கின்றார். இதற்கு முன்னர் இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான் முரளிதரன், இந்திய அணியின் அனில் கும்ளே, ஆஸி. வீரர் ஷேன் வோன் ஆகியோரே இவ்வாறு 600 டெஸ்ட் விக்கட்டுகளை கடந்த வீரர்களாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் ஆகக் குறைந்த பந்துகளை வீசி 600 விக்கட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை 07 பந்துகள் வித்தியாசத்தில் அண்டர்ஷன் தவர விட்டுள்ளார். 


இதற்கு முன்னர் 33,711 பந்துகளை வீசி முத்தையா முரளிதரன் ஆகக் குறைந்த பந்துகளில் 600 விக்கட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளராக வரலாற்றில் இடம்பிடித்திருந்தார். இந்த சாதனையை அண்டர்ஷன் வெறும் 07 பந்துகள் வித்தியாசத்தில் தவர விட்டுள்ளார். அவர் தனது 600 விக்கட்டுகளை வீழ்த்த 33,717 பந்துகளை எறிந்துள்ளார்.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.