93 ஆவது வருட மனாகிபுஷ்ஷாதுலி தமாம் மஜ்லிஸ் இன்றைய தினம் கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன்நூர் ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

கஹட்டோவிட்ட மின்ஹதுல் இப்றாஹிமிய்யா ஸாவியாவில் தொடர்ச்சியாக ஏழு நாட்கள் ஓதப்பட்டு வந்து அல் குத்புல் அக்பர் அல் கௌஸுல் அஷ்ஹர் அல் இமாம் அஸ்ஸெய்யித் அஷ்ஷெய்கு அபுல்ஹஸன் அலிய்யுஷ்ஷாதுலி ரஹ்மதுள்ளாஹ் அவர்களின் பெயரிலான மனாகிப் நிகழ்வின் தமாம் நிகழ்வு இன்றைய தினம் காலை 10 மணிமுதல் கஹட்டோவிட்ட மஸ்ஜிதுன்நூர் ஜும்மா பள்ளிவாசலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வுக்கு முக்கிய உலமாக்களாக கலீபதுஷ்ஷாதுலி அலவி மௌலானா முர்ஸி அவர்களும்,மாத்தறை மின்னதுல் பாஸியா அரபுக்கல்லூரியின் அதிபர் மௌலவி இஸ்திகார் பாரி அவர்கள் சிறப்பு பேச்சாளராகவும் கலந்து பயான் உபண்ணியாசம் நிகழ்த்தினார்கள். 

அத்துடன் இந்த மஜ்லிஸை அலங்கரிக்கவென பேருவளையில் இருந்து ஷாதுலிய்யா தரீக்காவின் இளைஞர்  குழுவினர் கலந்து மஜ்லிஸை சிறப்பித்தார்கள்.அத்துடன் உள்ளூரில் இருந்து கண்ணியம் மிக்க உலமாக்கள் ஏனைய  தரீக்காக்களின் முகத்தமீன்கள்,கலீபாக்கள் இஹ்வான்கள் முஹிப்பீன்கள் ஊர்ப்பொதுமக்கள் வாலிபர்கள் சிறுவர்கள் என பெருந்திரளான மக்கள் இந்த சிறப்பான மஜ்லிஸில்  ஒற்றுமையாக கலந்து சிறப்பித்தனர் .

ளுஹர் தொழுகையை தொடர்ந்து ஹழரா ஸிக்ர் மஜ்லிஸ்கள் நடைபெற்றதோடு அதைத்தொடர்ந்து மௌலவி இஸ்திகார் பாரி அவர்களின் சிறப்பு பயான் நிகழ்வும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றதோடு இறுதியில் அனைவருக்கும் நார்சாக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் பல்வேறு கட்டங்களின் போதான படங்களை காணலாம்.

செய்தித்தொகுப்பும் படங்களும் - எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.