மறைந்த முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்களது 3வது வருட நினைவு தின நிகழ்வுகள் இன்றைய  தினம் (30) பொரளையில் உள்ள அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் (ACUMLYF) தலைமையகத்தில் அதன் தலைவர் லுக்மான் சஹாப்தீனின் தலைமையில் நடைபெற்றது.  

முன்னாள் கொழும்பு மாநகர மேயரும், முன்னாள் ஈரான் துாதுவருமான ஒமா் காமில் அன்னாரது நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். மர்ஹூம் அஸ்வா் ஞாபகார்த்தமாக புலமைப் பரிசிலும் மாணவா்களுக்கு வழங்கப்பட்டதுடன், அன்னாருக்காக விசேட  துஆப் பிராத்தனையும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் ஒன்றியத்தின் செயலாளரும் சியன ஊடக வட்டத்தின் தலைவருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், நெய்னார் மன்றத்தின் தலைவர் இம்ரான் நெய்னார் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(செய்தி மற்றும் பட உதவி - அஷ்ரப் ஏ சமத்)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.