இலங்கையில் குரங்குகளின் தொகை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டின் விவசாயிகள் பாரிய பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குரங்குகள் தென்னை மரங்களையும் நாசப்படுத்துகிறது.

தாம் விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது நாட்டில் 10 லட்சம் குரங்குகள் இருந்தன. எனினும் தற்போது 20 லட்சம் குரங்குகள் நாட்டில் இருக்கின்றன.

பௌத்த நாடு என்றவகையில் இலங்கையில் விலங்குகள் துன்புறுத்தப்படமாட்டாது. அத்துட அவ்வாறு துன்புறுத்தப்பட்டால் அதனை எதிர்க்க உரிமைக்குழுக்கள் இருப்பதாகவும் மைத்திரிபால குறிப்பிட்டார்.

இந்தநிலையில் இலங்கை மாத்திரமே மனித நுகர்வுக்காக வளர்க்கப்படும் உணவுக்கு மாறாக விலங்குகளுக்கு பாதுகாப்பை வழங்குவதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.