பதில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வு பிரிவின் தலைவர் மற்றும் விசேட விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருந்த சம்பாயோ தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனுருந்த சம்பாயோ தம்மை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை நீதவான் நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து,  மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு இன்றைய தினம் ஆராயப்பட்ட போது, செப்டெம்பர் 21ஆம் திகதி குறித்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டவர்களை மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.