மாகாண சபை தொடர்பிலான விரிவான கவனத்தை செலுத்துமாறு இராஜாங்க அமைச்சர் ரியர் எட்மிரல் சரத்வீரசேகர அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

1988 ஆம் ஆண்டு மாகாண சபை முறைமை நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அந்த முறைமையே நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் இந்த முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட நிதி மற்றும் அவற்றின் மூலம் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வழங்குமாறும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 31 வருட காலப்பகுதியில் மாகாண சபைகள் மூலம் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றத்தை கண்டறியுமாறும் தனது அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மாகாண சபைகள் மூலம் புதிய தொலைநோக்குடன் செயற்றிறன் மிக்க நடவடிக்கைகள் மூலம் பொது மக்களுக்கான சேவையை நிறைவேற்றுவது தொடர்பிலும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தனது அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.