இன்று காலை ஆரம்பமான பொதுத் தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக எமது பிராந்திய ஊடகப்பிரிவு அதிகாரிகள் சற்று முன்னர் தெரிவித்தனர்.
காலை 10.00 மணி வரையில் நாடு முழுவதிலும் சுமார் 25 சதவீதமான வாக்காளர்கள் வாக்களித்திருப்பதாக இவர்கள் குறிப்பிட்டனர்.
கொழும்பு மாவட்டத்தில் 25 சதவீதமான வாக்காளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 25 சதவீத வாக்காளர்களும், குருநாகல் மாவட்டத்தில் 25 சதவீத வாக்காளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 24 சதவீத வாக்காளர்களும், மன்னார் மாவட்டத்தில் 21 சதவீத வாக்காளர்களும், கேகாலை மாவட்டத்தில் 25 சதவீத வாக்காளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 22 சதவீத வாக்காளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 30 சதவீத வாக்காளர்களும் , களுத்துறை மாவட்டத்தில் 20 சதவீத வாக்காளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 சதவீத வாக்காளர்களும், பதுளை மாவட்டத்தில் 25 சதவீத வாக்காளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 25 சதவீத வாக்காளர்களும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 சதவீத வாக்காளர்களும், கண்டி மாவட்டத்தில் 25 சதவீத வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர்.
திஹாமடுல தேர்தல் மாவட்டத்தில் மாத்திரமே 6 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதாக இந்த பிரதேச ஊடகப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.