இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ்.செல்லச்சாமி 94 ஆவது வயதில் நேற்று (01) காலமானார்.

உடல் நலக்குறைவால் சிலகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் நேற்று (01) காலை 11 மணியளவில் காலமானார்.

1989 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு எம்.எஸ். செல்லச்சாமி வெற்றி பெற்றார்.

முன்னைய அரசாங்கத்தில் சிறு கைத்தொழில்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் அன்னார் சேவையாற்றியிருந்தார்.

அன்னார் இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் ஸ்தாபகருமாவார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.