நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் மூலம் கம்பஹா மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம் நேற்று (25) நிறைவு செய்தது.

குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஒக்டோபர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தான் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளதால், தொடர்ந்தும் மேன்முறையீடு செய்ய வாய்ப்பில்லை எனவும் கூறியிருந்தார்.

இதனடிப்படையில் அவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் அல்லது ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் ஆகிய இரண்டு விடயங்கள் மாத்திரமே இருப்பதாக சட்டத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.