எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள், தொழில்சார் கற்கைகள் நிலையத்தால், வியாபார நிர்வாகமானி, வணிகமானி பட்டப்படிப்புக்களுக்கு வெளிவாரி மாணவர்களைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.

க.பொ.த உயர் தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் அங்கிகரிக்கப்பட்ட மூன்று பாடங்களில் (2018 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்திய பரீட்சை) ஆகக்குறைந்த சித்திகளுடன் பொதுச் சாதாரணப் பரீட்சையில் குறைந்த பட்சம் 30 சதவீதம் புள்ளிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

அத்துடன், க.பொ.த. சாதாரண பரீட்சையில் கணிதம், தமிழ் உட்பட 6 பாடங்களில் இரண்டு அமர்வுக்கு மேற்படாத வகையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு பல்கலைக்கழக www.seu.ac.lk எனும் இணையத்தளத்தை பார்வையிட முடியும்.

விண்ணப்பத்தை, செப்டம்பர் 14ஆம் திகதிக்கு முன்னர் உதவிப் பதிவாளர், வெளிவாரிப் பட்டப்படிப்புகள், தொழில்சார் கற்கைகளுக்கான நிலையம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென, அவர் மேலும் கேட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.