ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தேவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எங்கே என நான் தேடி வருகிறேன். கடந்த ஆண்டு சிறிசேன இதை அழித்துவிட்டார். ராஜபக்ஷவின் அரசியலை நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இருப்பினும் அவர் சக்திமிக்க தலைவராவார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை எண்ணி வருத்தம் அடைகின்றேன். அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. சிறிசேன மோசமான முறையில் கட்சியை அழித்துவிட்டார். இப்போது கேவலமான முறையில் சில அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

எமது கட்சியின் தலைவருக்கு எதுவும் இல்லை. செயலாளருக்கு பத்திக் அமைச்சு அதன்கீழ்  நிறுவனங்கள் எதுவும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.