கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் வாக்களிப்பு நிலையங்கள் மூலம் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில்லை எனவும் எனவே அச்சமின்றி மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லலாமெனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத்சமரவீர தெரிவித்துள்ளதாவது

வாக்களிப்பு நிலையங்களில் விரல்களை தொடாமல் கையில் மையிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழையும்போதும் வாக்களித்த பின்னர் வெளியே செல்லும்போது கைகளை தூய்மைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர்களை இடைவெளியை பேணுமாறும் முக்கவசங்களை அணியுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களும் முகக்கவசங்களை அணிந்திருப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.