இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி அபாரமாக ஆடி 07 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சவுத்தம்டனில் நேற்று இடம்பெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. 

இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 328 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இங்கிலாந்து அணி சார்பில்  EJG Morgan (c)  106, T Banton  58, DJ Willey  51 ஓட்டங்களை தமது அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். 

329 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அயர்லாந்து அணி 49.5 ஓவர்களில் 03 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அயர்லாந்து அணி சார்பில்  PR Stirling 142, A Balbirnie (c) 113 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். 

போட்டியின் சிறப்பாட்டக்காரராக அயர்லாந்து அணியின் PR Stirling  தெரிவு செய்யப்பட்டதுடன், தொடர் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் DJ Willey தெரிவு செய்யப்பட்டார்.

இதன் படி இங்கிலாந்து அணி தொடரை 2-1 கணக்கில் கைப்பற்றிக் கொண்டது.

இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.