இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 76,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,021 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 லட்சத்து 63 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 62,550 -ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றில் இந்தியா அமெரிக்காவிலும் பார்க்க முன்னிலையில் காணப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவில் முதல்முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 77,266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 76,472 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 1,021 உயிரிழந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 62,550 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்து தற்போது நாடு முழுவதும் 7,52,424 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை 26,48,999 ஆகவும் உள்ளது.

அமெரிக்காவில் ஜூலை மத்தியில் உலகிலேயே மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 77,255 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதே இதுவரை அதிகபட்ச கொரோனா பாதிப்பாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.