அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களது 03வது வருட ஞாபகர்த்த வைபவமும்,  நினைவுப் பேருரையும் எதிர்வரும் 30/08/2020 காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது. 

கொழும்பு 08, எல்விடிகல மாவத்தை, KG7 இல் அமைந்துள்ள அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் ஒன்றியத்தின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில்
ஈரானுக்கான முன்னாள் இலங்கை தூதுவரும், முன்னாள் கொழும்பு மாநகர மேயரும், சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் தலைவருமான ஒமர் காமில் "கடந்த பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும்" எனும் தலைப்பில் நினைவுப் பேருரையினை நிகழ்த்தவுள்ளார். 

மேலும், நிகழ்வில் மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களது ஞாபகத்தமாக வறிய உயர் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.

மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 071 4790063 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அல்லது குறுந்தகவல் மூலம் அறிவிக்குமாறு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபர் ஒன்றியத்தின் செயலாளர் அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.