அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு, ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிறைவடைந்தது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.
அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற 500 ஆண்டு கனவு நனவாகும் வகையில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
இந்த நிலையில், 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறை அமையும் இடத்தில் வைத்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
வாரணாசியில் இருந்து வேதவிற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டனர். இன்று காலை 8:00 மணி முதல் அடிக்கல் நாட்டுவிழாவிற்கன பூஜைகள் ஆரம்பமாகின.
விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து இன்று காலை 9:30 மணிக்கு சிறப்பு விமானத்தில் லக்னோ சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி சென்றார். அவரை உ.பி. முதல்வர் யோகி. வரவேற்றார்.
பின்னர் கார் மூலம் ஹனுமன்கர்கி கோவிலுக்கு சென்ற பிரதமர் சிறப்பு வழிபாடு செய்தார். கோவிலுக்கு வந்த அவரை, நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதன் பின்னர், கடவுள் ராமர் பிறந்த இடத்திற்கு சென்று பூஜை செய்து வழிபாடு நடத்தினார். மரக்கன்று நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க பூமி பூஜைகள் சடங்குகள் நடந்தன.
இதனையடுத்து, ராம ஜன்மபூமிக்கு சென்றார். பகல் 12:40 மணிக்கு கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில் 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டினார். பூமி பூஜைக்காக 2 ஆயிரம் கோயில்களில் இருந்து புனித மண் மற்றும் 100 நதிகளில் இருந்து புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டது.
உ.பி.யின் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு, ‛ ஸ்ரீராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில் அறக்கட்டளையை அமைத்தது.
இதனையடுத்து, அயோத்தி மாவட்டம் முழுதும் விழாக்கோலம் பூண்டது. அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு பூமி பூஜைக்கான சடங்குகள் அயோத்தியில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அயோத்தியில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதன் மூலம் அயோத்திக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இராமர் கோயிலுக்கான அடிக்கல்லை இன்று (புதன்கிழமை) நாட்டி வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், 'உலகம் முழுவதும் இன்று இராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள இராம பக்தர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீராமர், சீதா தேவியை நினைவு கூறுவோம்.
ன்னை இந்த விழாவுக்கு அழைத்ததற்கு மனமார்ந்த நன்றி. இராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொண்டதை நான் எனது வாழ்வில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். பல தலைமுறைகளாக பலர் இந்த இராமர் கோயிலுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர்.
இராமர் கோயிலுக்காக ஏராளமானோர் போராட்டக் களத்தில் இறங்கினர். இலட்சக்கணக்கானோரின் போராட்டத்தால்தான் இராமர் கோயில் எனும் கனவு இன்று நனவாகியுள்ளது. இராமர் கோயிலுக்காகப் போராடிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஐந்து நூற்றாண்டுகளாக வரலாற்றுச் சிறப்புமிக்க பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு மீண்டும் கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பாகப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்தியாவில் சிறுபான்மை மதத்தினரின் வழிபாட்டுத் தளங்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறது என்பதைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
1992ஆம் ஆண்டு பாஜக மற்றும் அதன் தீவிர இந்துத்துவ கூட்டணிக் கட்சிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த வலிமிகுந்த காட்சிகள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் மனதில் பழைமை மாறாமல் உள்ளது.
கொரோனா தொற்று பரவும் இந்த சூழலிலும் ராமர் கோயிலின் கட்டுமானம் தொடங்கப்பட்டது, முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, அச்சுறுத்தலான தேசிய குடிமக்கள் பதிவேடு, டெல்லியில் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடைபெற்ற தாக்குதல் மற்றும் பிற முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவில் முஸ்லிம் மக்கள் எவ்வாறு, அச்சத்திலும், ஒடுக்கப்பட்டும், வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டு வாழ்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.
RSS - பாஜக சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் முஸ்லிம்களின் வழிப்பாட்டு தளங்களைத் தாக்கி வருகின்றன.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியப் பாரம்பரியமிக்க நினைவுச் சின்னங்களை "இந்துத்துவ" அமைப்புகளிடமிருந்து காப்பாற்ற சர்வதேச நாடுகள், ஐநா., மற்றும் தொடர்புடைய அனைத்து சர்வதேச அமைப்புகள் உதவிபுரிய வேண்டும்.
பூமி பூஜை தொடர்பாக ராகுல் காந்தி பகிர்ந்துள்ள ட்வீட்டில், 'ராம் என்றால் அன்பு, ராம் என்றால் நீதி, ராம் என்றால் இணக்கம்,' என குறிப்பிட்டுள்ளார்.
ராமர் கோயிலுக்கான பூமி பூஜை சமயத்தில் யாரெல்லாம் கவ சேவகர்களின் தியாகத்தை மறந்தார்களோ அவர்கள் எல்லாம் ராம் துரோகிகள் என்று சிவசேனை கட்சி கூறி உள்ளது.
அழைப்பிதழ் வழங்கப்பட்ட பிரமுகர்கள்
அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ் ஆகியோர் மேடையில் அமர்வார்கள்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
நேபாளத்தில் இருந்து வரும் சில புனிதர்களும் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பார்கள் என அறக்கட்டளை உறுப்பினர் சம்பத் ராய் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அயோத்தி நிலத்தகராறு தொடர்பாக வழக்கு தொடர்ந்த ஹசிம் அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரியும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
ஹசிம் அன்சாரி இறந்த பிறகு, மகன் இக்பால் அன்சாரிதான் வழக்கை எடுத்து நடத்தினார்.
பிரதமர் மோதியும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து கொண்டது குறித்து கேள்வி எழுப்பி உள்ள சி.பி. ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்பு.
இது தொடர்பாக அவர்கள் பகிர்ந்துள்ள ட்வீட்டில், 'இந்திய அரசமைப்பு மதத்தையும், அரசியலையும் கலக்கக் கூடாது என்பதை மிக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது,' என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எம்.பி. அசாதுதீன் ஒவைசி
'இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்து அடிக்கல் நாட்டியதன் மூலம் தனது பதவியேற்பு உறுதி மொழியை நரேந்திர மோதி மீறியுள்ளார். இன்றைய தினம் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை தோல்வியடைந்த நாள். இந்துத்துவாவின் வெற்றி தினம்.' எம்.பி. அசாதுதீன் ஒவைசி
பாபர் மஸ்ஜித் வழக்கை உலக நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லும் குவைத் வழக்கறிஞர் மிச்சபின் அல் சுரைக்காஹ்
'இந்தியாவின் முஸ்லிம்கள் தனியாக இல்லை. மஸ்ஜித் அல்-அக்ஸா போன்ற பாபர் மஸ்ஜித் இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சொந்தமானது. நீதி கிடைக்கும் வரை பாபர் மஸ்ஜித் சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட இடத்தில் புனரமைக்கப்படும் வரை உம்மா அமைதியாக இருக்க மாட்டார். நான் நீதிக்காக நிற்கின்றேன்.'
சேக் முஹம்மட்
ஒரு பள்ளியை இழந்த நம்முடைய சமுதாயத்திற்கு அதற்கு பகரமாக பல நூற்றுக்கணக்கான பள்ளிகளை அவர்கள் கண் முன்னாலேயே இறைவன் நாம் வாழும் இந்த மண்ணில் நிச்சயம் உதிக்கச் செய்வான்.
பாபர் மஸ்ஜிதின் அரிய புகைபடங்கள் வெளியிடுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.