நாடாளுமன்றின் புதிய எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவை இன்றைய நாளுக்குள் பெயரிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா பதவிக்கு பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

 அது தொடர்பில் இறுதித் தீர்மானம் அன்று எடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய நாடாளுமன்றம் நாளை (20) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது. இதன்போது, சபாநாயகர், பிரதி சபாநாயகர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

அத்துடன், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.