கண்டியில் நேற்றிரவு உணரப்பட்ட அதிர்வு நில நடுக்கம் அல்ல என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கண்டியில் ஹாரகம , அனுரகம மயிலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் மக்கள் நேற்றிரவு 8.38 அளவில் ஒரு வகையான சத்தத்துடன் அதிர்வொன்று ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து தலாத்துஓயா பொலிசாருக்கு மக்கள் அறிவித்தனர்

இதுதொடர்பாக புவிச்சரிதவியல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு ஆராய்ச்சிப் பணியகம் தெரிவிக்கையில் ,குறிப்பிட்ட இந்த பிரதேசங்களில் நில நடுக்கம் எதுவும் பதிவாகவில்லை என்று குறிப்பிட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று இன்று பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் புவிச்சரிதவியல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு ஆராய்ச்சிப் பணியகம் மேலும் தெரிவித்தது.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.