கம்பஹா, கஹட்டோவிட்ட பகுதியில் வர்த்தக பிரிவை மேலோங்க செய்வதற்கான அங்குராரப்பண கூட்டம் நேற்று (16) கஹட்டோவிட்ட அல் பத்றியா மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் கௌரவ அஸாம் அவர்களின் தலைமையில் பாடசாலை வாசிகசாலை கட்டிடத்தில் நடைபெற்றது.

கஹட்டோவிட்ட அல் பத்றியாவில் வணிக துறையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள், வணிக துறை சார்ந்த ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கம்பஹா வலய மட்ட வர்த்தக பிரிவு மேம்பாட்டு துறைக்கு பொறுப்பாகவுள்ள பாடசாலையின் பழைய மாணவரும் முன்னால் ஆசிரியருமான கௌரவ ஸெயான் ஆசிரியர் அவர்கள் உட்பட பல புத்திஜீவிகளும், வர்த்தக துறையில் வீறுநடைபோடும் பழைய மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கலந்து கொண்டனர்.

ஆரம்ப உரையை பாடசாலை அதிபர் கௌரவ அஸாம் அவர்கள் நிகழ்த்தியதோடு இந்த பிரிவை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பாடசாலை பழைய மாணவரும் மீள்பார்வை பத்திரிகை ஆசிரியருமான கௌரவ பியாஸ் மொஹம்மத் உரை நிகழ்த்தியதுடன் அல் பத்றியாவின் வர்த்தக துறை தொடர்பான தற்போதைய நிலவரம் குறித்தும் அதை முன்னேற்ற வேண்டிய தேவை குறித்தும் பாடசாலை வர்த்தக துறைக்கு பொறுப்பாகவுள்ள ஆசிரியர் ரம்ஸான் அவர்கள் தெளிவு படுத்தினார்கள்.

நிகழ்வில் முக்கிய அம்சமாக வர்த்தக துறையை மேம்படுத்துவதற்கான வர்த்தக கழகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு ஆலோசனை குழு உறுப்பினர்களும் நிர்வாக குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆலோசனை குழுவில் கௌரவ முன்னால் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹம்மத் உட்பட பதினொரு பேரும், நிர்வாக குழு சார்பில் தலைவராக கௌரவ பியாஸ் மொஹம்மத் உட்பட பதினைந்து பேரும் சபையோரால் தேர்ந்தெடுத்ததோடு பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் பொறியியலாளர் சகோதரர் அப்துல் கரீம் அவர்கள் பாடசாலையும் வர்த்தக கழகத்தையும் ஒருங்கிணைத்து செல்லும் ஒருங்கிணைப்பாளராக செயற்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.