கம்பஹா- ஒருதொட்ட பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் கைக்குண்டு ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிபடையினர், கைக்குண்டை  மீட்டுஇ செயலிழக்கச் செய்துள்ளனர்.

இதேவேளை கிரிபத்கொடை- பெரேரா மாவத்தையில்  பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் மோட்டார் குண்டுகள் வீடொன்றின் முற்றத்திலுள்ள குப்பை போடும்  பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.