இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் பலோ ஒன் ஆனது பாகிஸ்தான் அணி. 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

தமது முதலாம் இன்னிங்சில் இங்கிலாந்தை விட 310 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்த பாகிஸ்தான் அணியினை மீண்டும் துடுப்பெடுத்தாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால், பாகிஸ்தான் அணி நேற்று தனது 2-வது இன்னிங்சை ஆடத்தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷான் மசூத் மற்றும் அபித் அலி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் ஷான் மசூத் 18 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பிராட் பந்து வீச்சிலும் அபித் அலி 42 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆண்டர்சன் பந்துவீச்சிலும் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தலைவர் அசார் அலி மற்றும் பாபர் அசாம் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் அணி 56 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து 100 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் 4-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அசார் அலி 29 ஓட்டங்களுடனும் பாபர் அசாம் 4 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்னும் 8 விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்தை விட 210 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி உள்ளது. போட்டியின் இறுதி நாள் இன்றாகும். இன்றைய நாளில் எஞ்சியுள்ள நிலையில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிபெற இங்கிலாந்து முயற்சிக்கும். பாகிஸ்தான் அணி இப்போட்டியை சமநிலையில் செய்ய முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.