கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முகாமைத்துவம் செய்து நிர்வகிப்பதற்கான செயலணிக்கு மேலும் 4 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ 12 பேர் அடங்கிய குறித்த செயலணியை நியமித்தார்.

அதனை அடுத்து கடந்த ஒகஸ்ட் மதம் 19 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர அந்த செயலணிக்கு மற்றொரு உறுப்பினரை நியமித்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.

அதற்கமைய அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர் வெடருவே உபாலி தேரர், மல்வத்துபீடத்தின் பதிவாளர் கலாநிதி பஹமுன சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் மற்றும் மல்வத்து பீட செயற்குழுவின் அமஹன்வெல்லே ஸ்ரீ சுமங்கள தேரர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பல தொல்பொருள் சின்னங்கள் பௌத்த மத பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் அதனை பாதுகாத்து முகாமைத்துவம் செய்ய தேர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் தேவைப்படுவதால் இவ்வாறு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.