நாடளாவிய ரீதியில் தபால் அலுவலகங்களை இன்று (04) மற்றும் நாளைய (05) தினங்களில் மேலதிகமாக சில மணித்தியாலங்கள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர்களால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதான மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்றிரவு (04) 8 மணி வரை திறந்திருக்கும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கடமைகளுக்காக வருகை தரும் அதிகாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதான மற்றும் உப தபால் அலுவலகங்கள் நாளை (05) மாலை 06 மணி வரையும் திறக்கப்படவுள்ளன.

தபால் நிலையங்களை மேலதிக நேரம் திறந்திருக்கும் போது அனைத்து செயற்பாடுகளும் பிராந்திய தபால் அத்தியட்சகரால் கண்காணிக்கப்படும் என தபால் மா அதிபர் கூறியுள்ளார்.

இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் இன்றும் நாளையும் அலுவலக நேரத்தில் தாம் வசிக்கும் பகுதிக்கு பொறுப்பான தபால் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.