மெஸ்சிக்கான இடமாற்ற கட்டணமாக இந்திய ரூபா மதிப்பீட்டில் 6,100 கோடி தொகையினை செலுத்தினால் மாத்திரமே பார்சிலோனா அணியில் இருந்து வெளியேற முடியும் என லா லிகா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சி. இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே மெஸ்சி ஸ்பெயின் நாட்டின் லா லிகா புகழ் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார்.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனாவை 8-2 என பேயர்ன் முனிச் அணி துவம்சம் செய்தது. இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. அந்த அணியின் பயிற்சியாளர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

மேலும், மெஸ்சிக்கான  இடமாற்ற தொகையை பார்சிலோனா அணி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பார்சிலோனா அவரை வெளியிட தயாராகிவிட்டது எனக் கருதப்படுகிறது. முடித்துக் கொள்ளுங்கள் என்று மெஸ்சி பார்சிலோனா அணிக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

மெஸ்சியுடன் பார்சிலோனா செய்துள்ள ஒப்பந்தம் 2021 சீசன் வரை உள்ளது. ஜூன் மாதத்துடன்  இடமாற்ற வேலைகள் முடிந்துவிடும். ஆனால் கொரோனா தொற்றால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வெளியேற விரும்பினால் அவருக்கான  இடமாற்ற தொகையாக 700 மில்லியன் யூரோ (இந்திய பணமதிப்பில் ரூ. 6094.93 கோடி) பார்சிலோனா நிர்ணயிக்கும் எனத் தெரிகிறது.

ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது எனக்கூறி மெஸ்சி  இலவச இடமாற்ற மூலம் வேறு அணிக்கு செல்லலாம் என நினைத்தார்.

ஆனால், மெஸ்சியை தங்கள் கிளப்பில் ஒப்பந்தம் செய்ய விரும்பும் கால்பந்தாட்ட அணி 6094.93 கோடி ரூபாய் (இந்திய பணமதிப்பில்)  பார்சிலோனாவுக்கு இடமாற்ற கட்டணமாக ஆக செலுத்த வேண்டும். 

6094.93 கோடி ரூபாய் (இந்திய பணமதிப்பில்) செலுத்தி வெளியீட்டு விதியை பூர்த்தி செய்தால் மட்டுமே மெஸ்சி பார்சிலோனாவை விட்டு வெளியேற முடியும் என லா லிகா கால்பந்து தொடரின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.