வாக்களிப்பு நடவடிக்கை ஆரம்பமான காலை 7 மணி முதல் இதுவரை 67 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.

கெபேயின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் இதனை தெரிவித்துள்ளார்.

அவற்றில் அதிகமான முறைப்பாடுகள் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பானவை எனவும் அவர் கூறினார்.

குறிப்பாக திகாமடுல்ல மாவட்டத்தின் அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, கல்முனை பகுதிகளில் 4 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த தேர்தலின் இதுவரை காலப்பகுதியில் வாக்களிப்பு நடவடிக்கைகள் மந்தகதியில் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த முறை பொதுத் தேர்தலை கண்காணிக்க கெபே சார்பில் 2200 கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் மக்கீம் மேலும் கூறியுள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.