ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் - கபே அமைப்பு வேண்டுகோள்

அடுத்த அரசியலமைப்பு திருத்தத்தில் நீதித்துறை, அரச சேவை, காவல்துறை மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று CaFFE சுட்டிக்காட்டுகிறது. ஆணைக்குழுக்களை அரசாங்கம் மேலும் முறைப்படுத்தவும், அவற்றின் அதிகாரங்களை அதிகரிக்கவும் வேண்டும் என்று கபே நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  மனாஸ் மக்கீன் தெறிவித்துள்ளார்.

சில ஆணைக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்து சமூகத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், அவற்றை ஒழிப்பது அல்ல, அவற்றை முறைப்படுத்துவதே தீர்வு என்றும் CaFFE நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் சுட்டிக்காட்டியுள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்கள் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்றும், அந்த ஆணைக்குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள சில பிரச்சினைகளைத் தீர்ப்பது ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அவர் கூறினார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.